நிலத்தை நண்பரின் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டல்; ரவுடி கைது


நிலத்தை நண்பரின் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டல்; ரவுடி கைது
x
தினத்தந்தி 4 April 2021 7:48 PM IST (Updated: 4 April 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

நிலத்தை நண்பரின் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம், 

ஸ்ரீபெரும்புதூர் ஆதனஞ்சேரியை சேர்ந்தவர் பூங்கோதை. இவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம் படப்பை வஞ்சுவாஞ்சேரியில் உள்ளது. அந்த நிலத்தை மதுரமங்கலத்தை சேர்ந்த ரவுடி குணா(38) தனது நண்பருக்கு எழுதி கொடுத்துவிடு என்று கூறி பூங்கோதையின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பூங்கோதை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகபிரியாவிடம் புகார் அளித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடியான படப்பை குணாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
1 More update

Next Story