அரும்பாக்கத்தில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


அரும்பாக்கத்தில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 April 2021 1:56 PM GMT (Updated: 2021-04-06T19:26:11+05:30)

அரும்பாக்கத்தில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று மாலை வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். சிறிதுநேரத்தில் அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுபற்றி அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மனோகரன், மின்சார பெட்டியின் அருகே ஆட்டோவை நிறுத்தி வைத்து உள்ளார். இதனால் மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story