கீழ்நகர் பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு. 1¾ மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.


கீழ்நகர் பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு. 1¾ மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
x
தினத்தந்தி 6 April 2021 2:46 PM GMT (Updated: 6 April 2021 2:46 PM GMT)

கீழ்நகர் பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 1¾ மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

கண்ணமங்கலம்

வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு

கண்ணமங்கலம் அருகே கீழ்நகர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 8.45 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை. அதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்து 1¾ மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் ஏராளமான வாக்காளர்களுக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் எந்திர கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்குப்பின் வாக்குப்பதிவு ெதாடங்கியது.

ஆரணி

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் 60, 61 ஆகிய இரண்டு வாக்குச்சாவடி மையத்திலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப்பதிவு செய்யமுடியவில்லை. சுமார் ஒரு மணிநேரம் முயற்சி செய்தும் பழுதை சரிசெய்ய முடியாததால் தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 8 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கியது. 

அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்ணமங்கலம், கொளத்தூர், வண்ணாங்குளம், அம்மாபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்குப்பதிவு மையங்களை நேரில் வந்து பார்வையிட்டார்.
அத்திமலைப்பட்டு கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று வாக்களித்தனர். 

போளூர்

போளூர் அருகே ரெண்டேரிப்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு எந்திரங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் ஒரு மணிநேரம் காத்திருந்து பின்னர் வாக்குப்பதிவு செய்தனர்.


Next Story