திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா


திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 April 2021 4:44 PM GMT (Updated: 2021-04-06T22:58:40+05:30)

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 125 ஆக உயர்ந்தது. இதுவரை 11 ஆயிரத்து 659 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Next Story