வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
x
தினத்தந்தி 6 April 2021 7:50 PM GMT (Updated: 2021-04-07T01:20:51+05:30)

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பேட்டை, ஏப்:
தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், நாங்குநேரி கூட்டுறவு சார் பதிவாளருமான இசக்கியப்பனுக்கு, குன்னத்தூரில் கை சின்னத்திற்கு வாக்களிக்க டோக்கன் வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரி இசக்கியப்பன் விசாரணை செய்ததில், குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதாசிவம் என்பவர் வாக்காளர்களுக்கு ஓட்டளிக்க டோக்கன் வழங்கியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சதாசிவம் மீது பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story