பல்லடத்தில் பயணிகள் சாலை மறியல்


பல்லடத்தில் பயணிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 April 2021 7:59 PM GMT (Updated: 6 April 2021 7:59 PM GMT)

திருப்பூர் மற்றும் பல்லடத்தில் இருந்து வாக்களிக்க செல்ல சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்
திருப்பூர் மற்றும் பல்லடத்தில் இருந்து வாக்களிக்க செல்ல சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சொந்த ஊர்களுக்கு செல்ல
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தொழில் நகரம் என்பதால் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். 100 சதவீதம் தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறும் வகையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து கடந்த -ந் தேதி 120 சிறப்பு பஸ்களும, 4ந் தேதி 170 அரசு பஸ்களும், நேற்று முன்தினம் 260 அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
சாலை மறியல்
ஆனால் நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தும் பஸ்கள் வரவில்லை. இதனால் பஸ் வசதி இல்லாமல் பலரும் அவதியடைந்தனர். இதன்காரணமாக ஆத்திரமடைந்த பயணிகள் பலர் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என கோஷமிட்ட அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பஸ் வசதி செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர். இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
 இதுபோல் கோவில்வழி பஸ் நிலையத்திலும் நெல்லை நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி செய்துதரக்கோரி நேற்று காலை 8.30 மணி அளவில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறப்பு பஸ்கள்
இதுபோல் பல்லடம் பஸ் நிலையத்திலும் நேற்று காலை நீண்ட நேரமாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதுரை திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்துதரக்கோரி காலை 9.30 மணிக்கு மறியல் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தனர். இந்த போராட்டங்களுக்கு பின்னர் பல்லடத்தில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 10 பஸ்களும், கோவில்வழியில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் பின்னர் பயணிகள் எந்த ஒரு சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

Next Story