மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 6 April 2021 7:59 PM GMT (Updated: 2021-04-07T01:29:06+05:30)

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலியானார்.

கறம்பக்குடி, ஏப்.7-
தஞ்சாவூர் மாவட்டம் நரிப்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 65) விவசாயி. இவரது உறவினர் சித்தாரிக் காட்டைச் சேர்ந்த கண்ணன் ( 35). இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஆலங்குடி கடலை அரவை மில்லுக்கு சென்றுகொண்டிருந்தனர். கறம்பக்குடி அக்னி ஆற்று பாலம் அருகே சென்றபோது எதிரே மங்கான் கொல்லைபட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (30), மணிகண்டன் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த பெரியதம்பி, கண்ணன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லபட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெரியதம்பி இறந்தார். படுகாயமடைந்த கண்ணன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவக்குமார், மணிகண்டன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story