தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்


தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 6 April 2021 8:28 PM GMT (Updated: 6 April 2021 8:28 PM GMT)

உசிலம்பட்டி அருகே 2 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட சூலப்புரம் அருகே உள்ள உலைப்பட்டி, குன்னுவார்பட்டி ஆகிய 2 கிராமங்களிலும் சுமார் 1,168 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் குன்னுவார்பட்டி கிராம மக்களும், உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்களும் வாக்களிக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்தனர். 

Next Story