ஒரே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது


ஒரே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது
x
தினத்தந்தி 6 April 2021 8:42 PM GMT (Updated: 6 April 2021 8:42 PM GMT)

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் இரவு 7 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது.

சிவகாசி, 
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சிவகாசி அருகே உள்ள ஏ.துலுக்கப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த 32-வது வாக்குச்சாவடியில் மட்டும் இரவு 7 மணிக்கு பின்னரும் வாக்களிக்க வாக்காளர்கள் சிலர் வந்திருந்தனர். 
இதை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலைய பொறுப்பாளர் அந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கினார். இதன் மூலம் 10 வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகாசி சட்டமன்ற தொகுதியில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் இரவு 7 மணிக்கு பின்னரும் வாக்குப்பதிவு நடந்தது.

Next Story