அரியலூர் மாவட்டத்தில் 82 சதவீத ஓட்டுப்பதிவு


வாக்குப்பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.
x
வாக்குப்பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.
தினத்தந்தி 6 April 2021 9:25 PM GMT (Updated: 6 April 2021 9:25 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 82 சதவீத ஓட்டுப்பதிவானது.

அரியலூர்:

வாக்குப்பதிவு சதவீதம்
அரியலூர் தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 9 சதவீதமும், காலை 9 மணி முதல் 11 மணி வரை 31 சதவீதமும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 51 சதவீதமும், மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 63 சதவீதமும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 77 சதவீதமும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 84.58 சதவீதமும் என மொத்தம் 84.58 சதவீத வாக்குகள் பதிவானது. ஜெயங்கொண்டம் தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 3 சதவீதமும், காலை 9 மணி முதல் 11 மணி வரை 21 சதவீதமும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 46 சதவீதமும், மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 52 சதவீதமும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 69 சதவீதமும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 80.35 சதவீதமும் என மொத்தம் 80.35 சதவீதம் வாக்குகள் பதிவானது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 82.465 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
வாக்குவாதம்
அரியலூர் தொகுதிக்குட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசாரில் ஒருவர் வயதான மூதாட்டி ஓட்டு போடுவதற்கு உதவி செய்து, அவரே அந்த மூதாட்டியின் வாக்கை செலுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அ.ம.மு.க. வேட்பாளர் மணிவேல் வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த போலீஸ்காரர் வெளியே அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் நேரம் வாரியாக வருமாறு:- 
பெரம்பலூர் தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 12.37 சதவீதமும், காலை 9 மணி முதல் 11 மணி வரை 31.42 சதவீதமும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 50.31 சதவீதமும், மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 63.03 சதவீதமும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை 73.31 சதவீதமும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 78.12 சதவீதமும் பதிவாகியிருந்தது. பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 78.12 சதவீத வாக்குகள் பதிவானது. குன்னம் தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 5.88 சதவீதமும், காலை 9 மணி முதல் 11 மணி வரை 31.45 சதவீதமும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 52.48 சதவீதமும், மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 64.54 சதவீதமும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 75.83 சதவீமும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 80.06 சதவீதமும் பதிவாகியுள்ளது. பெரம்பலூர் தொகுதியை விட குன்னம் தொகுதியில் அதிகம் ஓட்டுப்பதிவு ஆனது. மொத்தம் 80.06 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 79.04 சதவீதம் ஓட்டுப்பதிவானது. 
ஒரு திருநங்கை
பெரம்பலூர் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 22 திருநங்கை வாக்காளர்களில், ஒருவர் மட்டும் ஓட்டு போட்டுள்ளார். குன்னம் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 13 திருநங்கை வாக்காளர்களில், ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 கொரோனா நோயாளிகள் வந்தனர். அவர்களில் ஒருவர் புதுக்குறிச்சி வாக்குசாவடியிலும், மற்றொருவர் இரூரில் உள்ள வாக்குச்சாவடியிலும் ஓட்டளித்தனர். பெரம்பலூர் ஒன்றியத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெரம்பலூர் ரோவர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது அவர்களும், வாக்குச்சாவடி அலுவலர்களும் முழு உடல் கவசம் அணிந்திருந்தனர்.

Next Story