ஈரோட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி கடைகள் அடைப்பு


ஈரோட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 7 April 2021 12:27 AM GMT (Updated: 2021-04-07T05:57:20+05:30)

ஈரோட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஈரோடு
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் வேலை செய்பவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோட்டில் நேற்று தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டன. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கும் ஜவுளிச்சந்தையால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படும். ஆனால் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. இதேபோல் நகைக்கடை வீதியில் உள்ள நகைக்கடைகள் மற்றும் டீக்கடைகள், ஓட்டல்கள் உள்பட ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story