கால்நடைகளை காற்றோட்டமுள்ள கொட்டகைகளில் பராமரிக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க காற்றோட்டம் உள்ள கொட்டகைகளில் கால்நடைகளை வைத்து பராமரிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அடுத்த 3 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 25 சதவீதமாகவும் இருக்கும்.
காற்றோட்டம்
கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள் மற்றும் மர நிழல்களில் அவற்றை வைத்து பராமரிக்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையில் தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி, அதன் மீது தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்ப தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம்.
-கறவைப் பசுக்களில் ஒரு பசுவுக்கு நாள் ஒன்றுக்கு, 30 முதல் 50 கிராம் என்ற அளவில் அடர் தீவனத்துடன் தானுவாஸ் தாது உப்பு கலவையினை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story