காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை மாவட்ட சுகாதாரத்துறை தகவல்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 153 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தை சேர்ந்த 320 பேர் பிற மாவட்டத்திலுள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் தொகுதியில் 19 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 13 நபர்களும், உத்திரமேரூர் தொகுதியில் 10 நபர்களும், ஆலந்தூர் தொகுதியில் 52 நபர்களும் என 94 பேர் தங்களை வீட்டிலே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வாக்களிக்க விரும்பவில்லை என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்ததாக சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






