மாவடி பண்ணையில் அதிசயம் ஒரு வாழை மரத்தில் 3 பூக்கள்


மாவடி பண்ணையில் அதிசயம் ஒரு வாழை மரத்தில் 3 பூக்கள்
x
தினத்தந்தி 7 April 2021 12:20 PM GMT (Updated: 2021-04-07T17:50:53+05:30)

மாவடி பண்ணையில் வாழை மரம் ஒன்றில் மூன்று பூக்கள் பூத்துள்ளது.

தென்திருப்பேரை:
தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிபண்ணையில் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் ஒரு வாழைமரம் மூன்று பூக்கள் பூத்துள்ளது. பொதுவாக வாழை மரத்திலிருந்து ஒரு பூ வெளியே வரும், அது விரிந்து வாழைக்காய்கள் வெளிவந்து பின்பு கடைசியில் ஒரே ஒரு பூ இருக்கும். ஆனால் இவரது தோட்டத்தில் உள்ள வாழை மரம் ஒரு பூவாக பூத்து வாழைக்காய்கள் வெளிவந்த பின்னர் வாழைக்காய்களுக்கு அடியில் மேலும் 2 பூக்கள் பூத்துள்ளன. அதாவது ஒரு வாழை மரத்தில் 3 பூக்கள் பூத்துள்ளது. இந்த அதிசயமான காட்சியை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து அதிசயித்து வருகின்றனர்.

Next Story