அணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி


அணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 7 April 2021 2:22 PM GMT (Updated: 2021-04-07T19:52:24+05:30)

அணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி

அணைக்கட்டு

அணைக்கட்டு அடுத்த புதுமனை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் வினோத் குமார் (வயது 30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் இளைஞர்கள் குளிக்க சென்றனர். அப்போது மது போதையில் இருந்த வினோத்குமாரும் சென்று கிணற்றில் குதித்துள்ளார். பிறகு நான் எவ்வளவு நேரம் மூச்சை பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் இருக்கின்றேன் பார் என்று கூறியவாறு கிணற்றுக்குள் மூழ்கினார். 5 நிமிடத்திற்கு மேல் ஆகியும் வினோத்குமார் மேலே வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி வினோத்குமாரை பிணமாக மீட்டனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story