150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்


150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 7 April 2021 3:07 PM GMT (Updated: 7 April 2021 3:07 PM GMT)

திண்டுக்கல் புறநகர் பகுதியில் 150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.

 திண்டுக்கல்: 
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. 

இதுதவிர பழனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் கொரோனா பரவல் தொற்றால் மேலும் பலர் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவி வருவதால், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி புதிய சிகிச்சை மையம் அமைக்க உத்தரவிட்டார். 

இதுகுறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சிவகுமார் கூறுகையில், திண்டுக்கல் அருகே பள்ளபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் உள்ள தானிய கிடங்கில் 150 படுக்கை வசதி கொண்ட அரசு கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இனி வரும் நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்றார்.

Next Story