மாணவிக்கு பாலியல் தொல்லை சிறுவன் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை  சிறுவன் கைது
x
தினத்தந்தி 7 April 2021 6:08 PM GMT (Updated: 7 April 2021 6:08 PM GMT)

திருப்பூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வீரபாண்டி
திருப்பூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மாணவி
திருப்பூர்  கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த  13 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1ந் தேதி அந்த மாணவி  தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார்.அதன்பின்னர் அந்த மாணவியை காணவில்லை. அவர் என்ன ஆனார்  எங்கே சென்றார என அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவி குறித்து  திருப்பூர் சென்ட்ரல் போலீசாரிடம புகார் தெரிவித்தனர். 
புகார் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவியும்,  அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும்  திருவண்ணாமலையில் இருப்பது தெரியவந்தது.  
சிறுவன் கைது
இதையடுத்து போலீசார் திருவண்ணாமலை சென்று  இருவரையும் அழைத்து வந்து, விசாரணை செய்தனர். விசாரணையில்  மாணவியும் அந்த சிறுவனும் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்ததும், சம்பவத்தன்று அந்த சிறுவன் மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி திருவண்ணாமலைக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கை திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர்  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

Next Story