மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில்ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் + "||" + Gold worth Rs 16 lakh seized at Trichy airport

திருச்சி விமான நிலையத்தில்ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில்ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பட்டு, ஏப்.8-
திருச்சி விமான நிலையத்துக்கு கடந்த 5-ந்தேதி சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகம்மது என்ற பயணி தனது உடலில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கபட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 357 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.