வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 7:51 PM GMT (Updated: 7 April 2021 7:51 PM GMT)

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் கூறினார்.

விருதுநகர்,
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் கூறினார். 
வாக்குப்பதிவு எந்திரங்கள்
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- 
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றதொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்த 2,370 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டன. 
இந்த எந்திரங்கள் விருதுநகர்-சிவகாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தேவேந்திர குமார் சிங்குஷ்வாகா, பிரவான் ஷு குமார், வஸ்தவ், பினித்தா பெக்கு, சுரேந்திர பிரசாத் சிங் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. 
3 அடுக்கு பாதுகாப்பு
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு 
 மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் இதனை கண்காணித்து வருகின்றனர்.
 வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறையை சி.சி.டி.வி.யுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி வாயிலாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் 24 மணி நேரமும் கண்காணித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். 
 7 சட்டமன்ற தொகுதிக்களுக்கு தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள அறைகளில் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி நடைபெறுகிறது. 

Next Story
  • chat