மாவட்ட செய்திகள்

மேட்டூரில் குடிநீர் குழாயில் உடைப்பு + "||" + Breakage in drinking water pipe in Mettur

மேட்டூரில் குடிநீர் குழாயில் உடைப்பு

மேட்டூரில் குடிநீர் குழாயில் உடைப்பு
மேட்டூரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.
மேட்டூர்:
மேட்டூர் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயில் மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.