விபத்தில் 3 பேர் பலி: தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை -சங்ககிரி கோர்ட்டு தீர்ப்பு

விபத்தில் 3 பேர் பலி: தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை -சங்ககிரி கோர்ட்டு தீர்ப்பு
x

விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சங்ககிரி:
விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3 பேர் பலி
சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ்சும், ஈரோட்டில் இருந்து சேலத்தை நோக்கி வந்த அரசு பஸ்சும், சங்ககிரி அருகே வசந்தம் காலனி பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பழனியப்பன் (வயது 57), கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணிக்கம்மாள் (75), வாழப்பாடியை சேர்ந்த கார்த்திகா (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மேலும் 47 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
2 ஆண்டு சிறை
இதுகுறித்து சங்ககிரி போலீசார் சங்ககிரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து தீர்ப்பு கூறினார்.
அதில், ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் தாலுகா வடக்கு ஆனைக் கவுண்டனூர் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் அருள் கணேசமூர்த்தியை (33) குற்றவாளி என தீர்மானித்து 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.12 ஆயிரத்து 200 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story