கோவில்பட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

கோவில்பட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த குண்டம் பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவருக்கும், கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த திருமணமான 30 வயது பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண் முத்துக்குமாரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அப்பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பழக்கத்தின் போது எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டியதோடு, உன்னையும் உன் கணவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story