மாவட்ட செய்திகள்

ஊட்டி கொரோனா மையத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல்விளக்கம் + "||" + Demonstration of fire accident to medical personnel

ஊட்டி கொரோனா மையத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல்விளக்கம்

ஊட்டி கொரோனா மையத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல்விளக்கம்
ஊட்டி கொரோனா மையத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
‍ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெறும் மையமாக உள்ளது. இங்கு தீயணைப்பு துறை சார்பில், தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நேற்று நடைபெற்றது. 

ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் பேசும்போது, தீ விபத்தை ஆரம்பத்தில் அணைக்கவும், கட்டுப்படுத்தவும் தீயணைப்பு கருவிகள் அவசியம். இதனை கையாள தெரிந்து இருக்க வேண்டும். 

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது, 

ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.