துணை முதல்-அமைச்சர்் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மரணம்


துணை முதல்-அமைச்சர்் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மரணம்
x
தினத்தந்தி 8 April 2021 2:38 PM GMT (Updated: 8 April 2021 2:38 PM GMT)

துணை முதல்-அமைச்சர் ்ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மரணம் அடைந்தார்.


உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் (வயது 92) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் அவரது உடல் நேற்று மாலையில் உத்தமபாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story