திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதிக்கான பணிகள் பெரும்பாலும் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு மற்றும் பொதுப் பிரிவில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் மற்ற அலுவலர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ெதாற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story