வந்தவாசியில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி கொடூர கொலை


வந்தவாசியில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி கொடூர கொலை
x
தினத்தந்தி 8 April 2021 3:05 PM GMT (Updated: 8 April 2021 3:05 PM GMT)

வந்தவாசியில் 10 ேபர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டிச்சென்று அரிவாளால் ெவட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

வந்தவாசி

ஜாமீனில் வந்தவர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்தவர் நசீர்கான் (வயது 31), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நசீர்கான் கடந்தசில மாதங்களுக்கு முன்பு வந்தவாசி தாலுகா அலுவலக சாலையில் அம்மா உணவகம் அருகில் உள்ள ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். 

அப்போது அதே ஸ்டேண்டில் மஸ்தான் என்பவரும் ஆட்டோ ஓட்டி வந்தார். இருவருக்கும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்ற எண்ணம் மேலோங்கியது. இதனாலேயே இருவரும் ஆட்டோ ஸ்டேண்டு சங்க தலைவர் பதவிைய பிடிப்பதற்கு போட்டிப்போட்டனர். கடந்தசில மாதங்களுக்கு முன்பு சங்க தலைவர் பதவியை பிடிக்கும் போட்டியால் ஏற்பட்ட தகராறில் நசீர்கான், மஸ்தானை தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் நசீர்கான் கைதாகி  ஜாமீனில் வெளியே வந்தார்.

10 நாட்களாக நோட்டமிட்டு வந்தனர்

கொலை முயற்சியால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஒரே ஆட்டோ ஸ்டேண்டில் இருவரும் கீரியும், பாம்புமாக இருந்து வந்தனர். பின்னர் நசீர்கான் ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டு வந்தவாசியை அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியில் உள்ள கோழிக்கறி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் கறிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்தார். 

தன்னை கொலை செய்ய முயன்ற நசீர்கானை கொலை செய்ய மஸ்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. 

கொடூர கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நசீர்கான் கறிக்கோழிக்கடையில் வேலை முடிந்ததும் இரவு 10 மணியளவில் நசீர்கான் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருவேறு இடங்களில் நின்றிருந்த 10 பேர் கும்பல் ‘மங்கி குல்லா’ அணிந்து வந்து நசீர்கானை அரிவாளால் வெட்டினர். உடனே அவர் சுதாரித்துக் கொண்டு கும்பலிடம் இருந்து தப்பியோடினார். 

எனினும் கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று தலை உள்ளிட்ட பாகங்களில் வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததும், கும்பல் நசீர்கானின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வலைவீச்சு

நசீர்கான் கொலை செய்யப்பட்ட தகவலை கேள்விப்பட்டதும் குடும்பத்தினரும், உறவினர்களும் ஓடி வந்து கதறி அழுதனர். உடனே அவர்கள் வந்தவாசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். நசீர்கானின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசாா் வழக்குப்பதிவு செய்து நசீர்கானை கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் நசீர்கான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story