மீண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கியது


மீண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கியது
x
தினத்தந்தி 8 April 2021 4:50 PM GMT (Updated: 2021-04-08T22:20:56+05:30)

திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கியது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கியது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்பு
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
இதனால் இந்த பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் வகையிலும், புனிதவெள்ளி பண்டிகை என கடந்த 2-ந் தேதியில் இருந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
தற்போது தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. திருப்பூரில் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நேற்று முதல் மாணவ-மாணவிகள் நேரடி வகுப்பில் கலந்துகொண்டனர்.
கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய
முன்னதாக வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்திலும் தேர்தல் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் இருக்கைகள் மாற்றப்பட்டன. மேலும், மாணவ-மாணவிகளின் நலன் கருதியும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் பள்ளிகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
மேலும், வகுப்பறைக்குள்ளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் அனைவரும் முககவசம் அணிந்தபடி பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகளுக்கு வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Next Story