தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தீவனூர்  லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 April 2021 4:55 PM GMT (Updated: 8 April 2021 4:55 PM GMT)

திருவோண தீபம்

திண்டிவனம், 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில்  ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த புராதன கற்கோவிலில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பெருமாளுக்கு மாதந்தோறும் திருவோண தீபம் ஏற்றப்பட்டு வருவது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி பங்குனி மாதத்திற்கான திருவோண தீபம் நேற்று முன்தினம் மாலை ஏற்றப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. தீபத்தையொட்டி பெருமாள் வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பிறகு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மாலை யில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் பவனியாக கோவில் முன்புள்ள 32 அடி உயரமுள்ள கல்ஸ்தூபியின் அருகே கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு நாராயண பெருமாள் முன்னிலையில் கல் ஸ்தூபியில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு சுற்றியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.


Next Story