மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து சிறுவன் பலி + "||" + The snake bites and kills the boy

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி
பாம்பு கடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே பரியாமருதுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்குமார். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 5). கடந்த 5-ந் தேதி பிரவீன் குமார் மற்றும் அவரது தாயார் கவிதா ஆகியோர் வயலுக்குச் சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பிரவீன் குமாரை பாம்பு கடித்துள்ளது. பின்னர் பிரவீன்குமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நேற்று அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து நெற்குப்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.