தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் தீர்வு காணலாம்


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் தீர்வு காணலாம்
x
தினத்தந்தி 8 April 2021 5:26 PM GMT (Updated: 2021-04-08T22:56:04+05:30)

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணலாம் என்று மாவட்ட செசன்ஸ் நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுமதி சாய் பிரியா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணலாம் என்று மாவட்ட செசன்ஸ் நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுமதி சாய் பிரியா தெரிவித்துள்ளார்.
சமரச முடிவு
சிவகங்கை மாவட்ட செசன்ஸ் நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுமதி சாய்பிரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 10 அமர்வுகளில் நீதிபதிகள், வக்கீல்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை குறித்த வழக்குகள், தொழிலாளர் பிரச்சினை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் குறித்து தீர்வு கண்டு பயனடையலாம்.
தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் யாதொரு மேல் முறையீடும் செய்ய இயலாது. இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை விரைவாகவும், சுமூகமாகவும் தீர்வு கண்டு பயன் பெறுமாறு சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story