காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2021 5:32 PM GMT (Updated: 8 April 2021 5:32 PM GMT)

திருப்பூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீரபாண்டி
திருப்பூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வாலிபர் 
திருப்பூர்  பலவஞ்சிபாளையம் அபிராமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் தினேஷ் குமார் வயது 23. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் தாராபுரத்தில் உள்ள  உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போதும் அவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து, அந்த பெண்ணை, தினேஷ்குமார் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 
தற்கொலை 
 இந்த நிலையில் தினேஷ்குமாரை காதலித்து வந்த பெண் திடீரென்று காதல் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று  தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் தினேஷ்குமார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Next Story