45 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு கொரோனா தடுப்பூசி


45 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 8 April 2021 5:44 PM GMT (Updated: 8 April 2021 5:44 PM GMT)

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகவும் சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகவும் சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

அதிகரிக்கும் கொரோனா 

பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நகர பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

பொள்ளாச்சியில்  கொரோனா பாதிப்பிற்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

மேலும் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-

50 ஆயிரம் தடுப்பூசிகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமாக கண்டறிய சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

அந்த பகுதிகளுக்கு சென்று முகாம் நடத்தி 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். 

இதற்காக பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு 50 ஆயிரம் தடுப்பூசி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 

முழு ஒத்துழைப்பு 

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

 வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 

காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story