தமிழ்நாடு வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் கூட்டம்


தமிழ்நாடு வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 8 April 2021 6:04 PM GMT (Updated: 2021-04-08T23:34:19+05:30)

தமிழ்நாடு வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் கூட்டம் நடந்தது.

நொய்யல்
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் கூட்டம் பூலாம் பாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புத்தாக்க திட்ட அலுவலர் மணி தலைமை தாங்கினார். மகளிர் சுய உதவி குழு கரூர் வட்டார அலுவலர் அனிதா முன்னிலை வகித்தார். வேட்டமங்கலம் வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர் ஜெகதீஸ்வரி வரவேற்று பேசினார். இதில் வேட்டமங்கலம், கோம்பு பாளையம், திருக்காடுதுறை, நஞ்சை புகளூர், ஆத்தூர், கடம்பன் குறிச்சி உள்ளிட்ட 14 ஊராட்சிகளை சேர்ந்த வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் கலந்துகொண்டு மார்ச் மாத கடன் அட்டை, கடன் திரும்ப செலுத்திய விவரம், கடன் திரும்ப செலுத்திய பதிவேடு மற்றும் ரொக்க பதிவேடு, பொது பதிவேடு, தீர்மான பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை காட்டினர். இதையடுத்து அனைத்து பதிவேடுகளையும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

Next Story