மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த மரம் அகற்றம் + "||" + Tree

வீட்டின் மீது விழுந்த மரம் அகற்றம்

வீட்டின் மீது விழுந்த மரம் அகற்றம்
வீட்டின் மீது விழுந்த மரம் அகற்றப்பட்டது.
நொய்யல்
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையில் வேலாயுதம் பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் ஒரு வீட்டின் மீது புளியமரத்தின் கிளை சாய்ந்து விழுந்தது.  இந்நிலையில் அவற்றை அகற்றுவதற்காக நேற்று காலை முதல் மாலை வரை அந்த வழியாக எந்த வாகனமும் செல்லாதபடி ேபாக்குவரத்து தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. 
இதையடுத்து கிரேன் மூலம் வீட்டின் மீது விழுந்த மரம் அகற்றப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலை அருகே வாக்குச்சாவடி மீது 2 ஆலமரக்கிளைகள் முறிந்து விழுந்தன ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக மீட்பு
சென்னிமலை அருகே வாக்குச்சாவடி மீது 2 ஆலமரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.
2. அன்னவாசலில் ஓட்டல் மீது புளியமரம் சாய்ந்தது 10-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்
அன்னவாசலில் ஓட்டல் மீது புளியமரம் சாய்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.