காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி


காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி
x
தினத்தந்தி 9 April 2021 11:45 AM IST (Updated: 9 April 2021 11:45 AM IST)
t-max-icont-min-icon

புதிய ரெயில் நிலையம் முன்பாக 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் புதிய ரெயில் நிலையமும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வையாவூர் செல்லும் சாலையில் பழைய ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. புதிய ரெயில் நிலையம் முன்பாக 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலைய மேலாளர் புருஷோத்தமன் கூறுகையில்:-

தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளின் வேண்டுகோளின்படி ரெயில் நிலையம் முன்பாக 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கொடியின் அளவு 40-க்கு 20 என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது .கொடிக்கம்பம் உயரமாக இருப்பதாலும், பலரது கண்களில் படுவது போல அமைக்கப்பட்டிருப்பதாலும் பலரும் ரெயில் நிலையத்துக்கு வந்து நன்றி தெரிவித்து செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story