மாவட்ட செய்திகள்

நகை பறித்த வாலிபர் கைது + "||" + Youth arrested for stealing jewelery

நகை பறித்த வாலிபர் கைது

நகை பறித்த வாலிபர் கைது
நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாட்டவயல் அருகே உள்ள வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ராஜன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரித்தா. சம்பவத்தன்று ராஜன் வெளியூர் சென்று இருந்தார். 

இதனால் கடையில் பிரித்தா மட்டும் இருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமி பொருட்கள் வாங்குவது போல நடித்து அவரது கழுத்தில் கிடந்த 3¾ பவுன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பி சென்றார். 

இதுகுறித்த புகாரின் பேரில் அம்பலமூலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டது, பந்தகாப்பு பகுதியை சேர்ந்த சஞ்சீவ்(வயது 32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது பயங்கரவாத பயிற்சி பெற்றவரா? அதிகாரிகள் விசாரணை
தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று வந்த வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏமனில் பயங்கரவாத பயிற்சி பெற்றாரா? என அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
2. வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர்
வங்கியில் கண்ணாடியை வாலிபர் ஒருவர் அடித்து நொறுக்கிச்சென்றார்.