மாவட்ட செய்திகள்

வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு + "||" + Lawyers Court Ignore

வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் அதன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், குன்னம் பகுதியில் வருகிற 24-ந்தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் கோர்ட்டு மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்க உத்தேசித்துள்ளதை கைவிட ஐகோர்ட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெள்ளிக்கிழமை(நேற்று) தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட அனைத்து கோர்ட்டுகளிலும் பணி புறக்கணிப்பு செய்வது என்றும், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், 19-ந்தேதி ஆர்ப்பாட்டமும் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பார் அசோசியேசன் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. 5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
5 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.