கார் கவிழ்ந்து மதுரை பெண் உள்பட 3 பேர் பலி
காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மதுரை பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். கோவிலுக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மதுரை பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். கோவிலுக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
கார் கவிழ்ந்தது
முத்துராமலிங்கம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று காலை காரில் சென்றார். காரை பசும்பொன் (26) ஓட்டிச் சென்றார். அந்த கார் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவிலை அடுத்த உலக ஊரணி கிராமத்தின் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. இதனால் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி சாலைேயார பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் கார் உருக்குலைந்தது.
3 பேர் பலி
இந்த விபத்தில் காருக்குள் இருந்த அல்லிராணி, அவரது உறவினர்கள் மதுரை முல்லை நகரை சேர்ந்த ராஜா(52), ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த ஆறுமுகம்(65) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story