திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 1,185 பேர் சிகிச்சை புதிதாக 187 பேர் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,185 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.நேற்று புதிதாக 187 பேர் பாதிக்கப்பட்டனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,185 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று புதிதாக 187 பேர் பாதிக்கப்பட்டனர்.
அறிகுறி இல்லாமல் தொற்று
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப சுகாதாரத்துறையினர் மீண்டும் கொரோனா சிறப்பு வார்டுகளை தயார் செய்து ஆயத்த நிலையில் வைத்திருக்கிறார்கள்.
அதே வேளையில் எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முகக் கவசம் அணிந்தும் சமூக விலகல் இடைவெளியை கடைப்பிடித்தும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1,185 பேர் சிகிச்சை
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 16,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 87 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை பூரண குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 15,873 ஆகும். திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று வரை 1,185 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 190 ஆகும்.
Related Tags :
Next Story