சேலத்துக்கு சரக்கு ரெயில்களில் வந்த 1,930 டன் சிமெண்டு
சேலத்துக்கு சரக்கு ரெயில்களில் 1,930 டன் சிமெண்டு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து 1,300 டன் சிமெண்டு சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதேபோல் கரூரில் இருந்து 630 டன் சிமெண்டு சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தொழிலாளர்கள் சரக்கு ரெயில்களில் இருந்து சிமெண்டு மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி சேலத்தில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story