செங்கல்பட்டில் கஞ்சாவுடன் திரிந்த 2 பேர் கைது

செங்கல்பட்டில் கஞ்சாவுடன் திரிந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2021 10:07 AM IST (Updated: 11 April 2021 10:07 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் செங்கல்பட்டு டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு,

அப்போது முககவசம் மற்றும் தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் போலீசாரை கண்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த இரண்டு இளைஞர்கள் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், எலெக்ட்ரிசீயன் வேலை செய்வதாகவும் கூறினர். மேலும் இளைஞர்களை கண்டு சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை கண்டறிந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, வடிவேல் (வயது 29) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Next Story