இறந்துபோன கோழிகளுக்கு இறுதிச்சடங்கு செய்த சிறுவன்


இறந்துபோன கோழிகளுக்கு இறுதிச்சடங்கு செய்த சிறுவன்
x
தினத்தந்தி 11 April 2021 8:54 PM IST (Updated: 11 April 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

தனது பண்ணை தோட்டத்தில் ஆடு, மாடுகள், வான்கோழிகள், நாட்டு கோழிகளையும் வளர்த்து வருகிறார்.

கர்நாடகா,

கோலார் (மாவட்டம்) அருகே துட்லி கிராமத்தை சேர்ந்தவர் டி.வி.கோபால கிருஷ்ணா. விவசாயி. இவர் தனது பண்ணை தோட்டத்தில் ஆடு, மாடுகள், வான்கோழிகள், நாட்டு கோழிகளையும் வளர்த்து வருகிறார். இந்த கால்நடைகளுடன் கோபாலகிருஷ்ணாவின் மகன் மவுனேஷ் கடந்த 5 ஆண்டுகளாக பழகி வந்துள்ளான். அதுபோல் ஆடு, மாடு, கோழிகளும் அவனுடன் பாசமாக பழகி வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் கோபாலகிருஷ்ணா வளர்த்து வந்த கோழிகள் திடீரென்று அடுத்தடுத்து செத்தன. இதை பார்த்த மவுனேஷ் சோகத்தில் மூழ்கினான். பின்னர் சிறுவன் மவுனேஷ், தனது தந்தை உதவியுடன் இறந்துபோன கோழிகளுக்கு இறுதிச்சடங்கு செய்து, தோட்டத்தில் குழி தோண்டி அடக்கம் செய்தான். பின்னர் கோழிகள் புதைக்கப்பட இடத்தில் மாலைகள் அணிவித்து பூக்கள் தூவி பால் ஊற்றி வழிபாடு நடத்தினான். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story