ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்


ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 12 April 2021 10:27 AM IST (Updated: 12 April 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் ஆதிகேசவ பெருமாள் நகர் கூட்டு சாலையில் கம்ப கால்வாயில் துர்நாற்றம் வீசியது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் தகவல் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்த போது கால்வாயில் 45 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார்? எப்படி இறந்தார்? யாராவது கொலை செய்து உடலை கால்வாயில் தூக்கி விசினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த நபரின் கையில் கலா என்று பச்சை குத்தி இருப்பதால் இதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 


Next Story