மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன


மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன
x
தினத்தந்தி 13 April 2021 1:41 AM IST (Updated: 13 April 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

திருவிளக்குறிச்சியில் மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான 2 கறவை மாடுகள் பட்டியில் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கி 2 மாடுகளும் செத்தன. இது பற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) நாராயணசாமி உடனிருந்தார்.

Next Story