தலித் வாலிபர்கள் படுகொலையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தலித் வாலிபர்கள் படுகொலையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2021 9:43 PM IST (Updated: 13 April 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

தலித் வாலிபர்கள் படுகொலையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர், 

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள அரண்மனை எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் சோகனூரில் 2 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துகுமரன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் வெண்மணி குணசேகரன், பேராவூரணி ராஜமாணிக்கம், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், வங்கி ஊழியர் சங்கத்தலைவர் அன்பழகன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற் சங்க தலைவர் துரை மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story