மாவட்ட செய்திகள்

கட்டிட மேஸ்திரி பலி + "||" + Accident

கட்டிட மேஸ்திரி பலி

கட்டிட மேஸ்திரி பலி
திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதலில் கட்டிட மேஸ்திரி பலியானார்.
திருப்பத்தூர்,

மதுரை மாவட்டம் சொக்கிக்குளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜா (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலை மதுரையிலிருந்து காரைக்குடிக்கு வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு-கோட்டையிருப்புக்கு இடையே சென்ற போது எதிரே மதுரை நோக்கி வந்த சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா பலியானார். சரக்கு வாகனம் ரோட்டை விட்டு கீழே இறங்கி கருவேல மரத்தில் மோதி நின்றது.

இது குறித்து திருப்பத்தூர் போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நெடுமதுரை வடக்கு தெருவை சேர்ந்த அழகன் மகன் முருகன்(33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியது; 4 பேர் பலி- டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் வீட்டுக்குள் புகுந்தது- பெண் படுகாயம்
ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் வீட்டுக்குள் புகுந்ததில் பெண் படுகாயம் அடைந்தார்.
3. கார் மீது லாரி மோதல்; அரசு பெண் டாக்டர் உயிர் தப்பினார்
கார் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பெண் டாக்டர் பரிதாபமாக உயிர் தப்பினார்.
4. மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5. டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.