மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது + "||" + Dispute over dog entry into house: 2 people arrested for attacking a neighbor

வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது

வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது
வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது.
திருமக்கோட்டை, 

திருமக்கோட்டை கடைத்தெருவில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் வடிவேலு(வயது52). இவர் புதுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கலியபெருமாள்(60), தென்னரசு(40), பஞ்சநாதன்(50). சம்பவத்தன்று தென்னரசு வீட்டில் வளர்க்கும் நாய் வடிவேலு வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் வடிவேலுவை பஞ்சநாதன், கலியபெருமாள், தென்னரசு, செல்வவிநாயகம் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வடிவேலு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசு, கலியபெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பஞ்சநாதன், செல்வநாயகம் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை திருமக்கோட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது; 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில், திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த மும்பை ஆஸ்பத்திரி தீ விபத்தில் 2 பேர் கைது
பாண்டுப் வணிக வளாக தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
5. மும்பையில் ரூ.21 கோடி யுரேனியத்துடன் 2 பேர் கைது
மும்பையில் ரூ.21 கோடி யுரேனியத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.