வேதாரண்யம், வாய்மேடு பகுதியில் 2-வது நாளாக கொட்டித்தீர்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி


வேதாரண்யம், வாய்மேடு பகுதியில் 2-வது நாளாக கொட்டித்தீர்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 April 2021 8:40 PM IST (Updated: 14 April 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம், வாய்மேடு பகுதியில் 2-வது நாளாக கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வாய்மேடு, 

நாகை மாவட்டம் வேதாரண்யம், வாய்மேடு பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக பெய்த கன மழையால் வெப்பம் தணிந்தது.

வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர், வாய்மேடு, தாணிக்கோட்டகம், மருதூர், ஆயக்காரன்புலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக கடும் வெயில் அடித்து வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் எள், கடலை, உளுந்து, தென்னை, மா, முந்திரி, சவுக்கு ஆகியவற்றை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைப்போல அகஸ்தியன்பள்ளி, தோப்புத்துறை, கருப்பம்புலம், நெய்விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. 

Next Story