பூதலூரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பூதலூரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் பூதலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் பெரியார் புரத்தை சேர்ந்த உமாபதி (வயது36) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார்.
ரூ.70 ஆயிரம் திருட்டு
கடையில் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்ைல. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உமாபதி பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story