செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் படி பூஜை


செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் படி பூஜை
x
தினத்தந்தி 14 April 2021 5:23 PM GMT (Updated: 14 April 2021 5:23 PM GMT)

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் படி பூஜை நடைபெற்றது.

பாடாலூர், ஏப்.15-
ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் மலையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. மற்ற முருகன் கோவிலில் முருகன் கையில் வேல் இருக்கும். இத்தலத்தில் மட்டும் வேலுக்கு செங்கரும்பு ஏந்தி நிற்பதால் "செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் " என்ற சிறப்பு பெயரும் உண்டு. தமிழ் வருடப்பிறப்பையொட்டி நேற்று படி பூஜை விழா நடைபெற்றது.படிகளுக்கு சந்தனம் பூசப்பட்டு, பூக்கள் வைத்து சிறப்பு பூஜைகளோடு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த படி பூஜை விழாவில் குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story